
‘’தனது மகன் இந்தி உள்ளிட்ட பாடங்களில் மார்க் வாங்கியதை பெருமையுடன் பதிவிட்ட சிம்லா முத்துச்சோழன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Archived Link
மாரிதாஸ் காணொளிகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சிம்லா முத்துச்சோழன் ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும், அவரது மகனின் மார்க்ஷீட் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். இதன் மேலே, ‘’இது யார் தெரியுமா? திமுக பொறுப்பாளர் 2016 ல் RK நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்… சரி இதெல்லாம் எதற்கெனில் இன்று ஹிந்தி மொழியை எதிர்க்கிறது திமுக ஆனால் திமுக வின் முக்கிய பொறுப்பாளரான இவருடைய மகன் பத்தாம் வகுப்பில் #ஹிந்தி உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதை சந்தோசமாக பதிவிட்டுள்ளார் பாருங்கள்… இதுவே திமுக வின் உண்மை முகம். நன்றி : Aji Nsa‘’, என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் கூறியுள்ளது போல, 2016ம் ஆண்டில் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்கே நகரில் போட்டியிட்டு, தோல்வியடைந்தவர்தான் சிம்லா முத்துச்சோழன். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்பேரில், இவர் தற்போது ஃபேஸ்புக்கில் எதுவும் மார்க்ஷீட் பதிவு வெளியிட்டுள்ளாரா என தேடிப் பார்த்தோம். அவரது SHIMLA MUTHUCHOZHAN என்ற அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, தகவல் தேடிப்பார்த்தோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டதுபோல, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சிம்லா முத்துச்சோழன் கடந்த மே 7ம் தேதியன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தனது மகனின் 10வது மார்க்ஷீட்டை பகிர்ந்து, நான் மகிழ்ச்சியாக உள்ளேன், என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த மார்க்ஷீட்டில் இந்தி உள்ளிட்ட அனைத்து பாடங்களும், அதில் அவரது மகன் பெற்ற மதிப்பெண் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

Archived Link
இது உண்மையாகவே, சிம்லா முத்துச்சோழனின் ஃபேஸ்புக் ஐடியா என தகவல்களை தேடிப் பார்த்தோம். அப்போது, இது உண்மையான ஐடிதான் என உறுதியானது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மைதான்.
ஆனால், அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்கும், திமுக.,விற்கும் தொடர்பு உள்ளதாக, சம்பந்தப்படுத்தி குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளனர். ‘’என் மகன் இந்தியில் இவ்வளவு மதிப்பெண் வாங்கியுள்ளார்,’’ என்று சிம்லா முத்துச்சோழன் குறிப்பிடவில்லை. பொதுவாக, ‘எனது மகனின் மார்க் இது,’ என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது அவரது தனிப்பட்ட விசயம். அதற்கும், கட்சிக்கும் சம்பந்தப்படுத்தி கருத்து பகிர்வது ஏற்புடையதல்ல. தற்போது தமிழகத்தில் நிலவும் இந்திக்கு எதிரான அரசியல் பிரச்னைகளை மையப்படுத்தி, இந்த பதிவை தனது சுயநோக்கத்திற்காகக் குறிப்பிட்ட நபர் பகிர்ந்துள்ளார்.
எனவே, இதில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து இடம்பெற்றுள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது.

Title:சிம்லா முத்துச்சோழன் தனது மகன் இந்தியில் மார்க் வாங்கியதை பெருமையுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா?
Fact Check By: Parthiban SResult: Mixture
