ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றிய பதிவால் சர்ச்சை

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’திருட்டுக் காவலாளிகள்,’’ என்ற தலைப்பில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றி, விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த தகவல்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\smriti 2.png

Stalin Panimayam என்பவர் மேற்கண்ட பதிவை, கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், திருட்டுக் காவலாளிகள் எனக் குறிப்பிட்டு, அதன் கீழே, ஸ்மிருதி இரானி புகைப்படத்தை வைத்து, அவர் 2014ல் பி.காம். படித்ததாகச் சொன்னார் என்றும், 2019ல் பிளஸ் 2 மட்டும் படித்திருப்பதாகச் சொன்னார் என்றும் கூறியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
ஸ்மிருதி இரானி, கடந்த 2003ம் ஆண்டில் பாஜக.,வில் சேர்ந்தார். அதில் இருந்து படிப்படியாக, கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர், 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன்பின், 2010ல் பாஜக.,வின் மகளிர் பிரிவு தலைவியாக அவர் நியமிக்கப்பட்டார். பின்னர், 2014 நாடாளுமன்ற தேர்தலில் மக்களவைக்கு போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, வெற்றி பெற்று, முதலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். ஆனால், அவரது வேட்புமனுவில் பி.காம் எனக் கூறப்பட்டிருந்ததால், இதுபற்றி பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். தற்போது, தகவல் ஒலிபரப்புத் துறையையும் அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி பற்றிய வழக்கில், அவர் பிகாம் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றும், அவரது முழு கல்வித் தகுதி பிளஸ் 2 என்றும் தெரியவந்தது. இதனை அவரும் ஒத்துக் கொண்டார். இதுபற்றி விக்கிப்பீடியா தகவல் ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் ஸ்மிருதி இரானி தனது வேட்புமனுவில் கல்வித் தகுதி பிளஸ் 2 என்றுதான் கூறியுள்ளார். இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில்தான், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் அவரது கல்வித் தகுதி பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. தகவல் என்னவோ உண்மைதான்.

ஆனால், ஸ்மிருதி இரானி உள்பட பாஜக.,வைச் சேர்ந்தவர்களை திருட்டுக் காவலாளிகள் எனக் கூறி, தனது சொந்த கருத்தையும் இந்த பதிவர் வெளியிட்டுள்ளார். எனவே, இதில், பாதி உண்மை, பாதி சொந்த கருத்து என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றிய பதிவால் சர்ச்சை

Fact Check By: Parthiban S 

Result: Mixture