எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ் என்று கூறி பரவும் வதந்தி

Coronavirus சமூக ஊடகம் | Social சினிமா | Cinema

‘’எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Lotus News FB Post LinkArchived Link

உண்மை அறிவோம்:

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நலம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது. 

சில நாள் முன்பு, எஸ்பிபி இறந்துவிட்டதாகக் கூறி ஒரு வதந்தி பரவியது. நாமும் அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்தோம். 

Fact Crescendo Tamil Link 

இதுபோலவே, மேற்கண்ட தகவலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. உண்மையில், இது தவறான தகவலாகும். முதலில், சினிமா பிஆர்ஓ நிகில் என்பவர் இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டார். 

அவரை நம்பி புதிய தலைமுறை ஊடகம் இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் நீக்கிவிட்டது. ஆனால், அதற்குள்ளாக மற்ற வாசகர்கள் அதனை பகிர தொடங்கிவிட்டனர். இன்னும் சில ஊடகங்கள் இந்த செய்தியை அப்படியே அழிக்காமல் வைத்துள்ளன. 

WinNews LinkArchived Link

உண்மை என்னவெனில், எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் என செய்தி பரவ தொடங்கிய சில மணி நேரத்திலேயே, அவரது மகன் எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Archived Link 

அதேசமயம், எஸ்பிபி சரண் கூறியதன் பேரிலேயே, தான் ட்வீட் வெளியிட்டதாகக் கூறிய பிஆர்ஓ நிகில் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 

Archived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உள்ளது உண்மைதான். அதனை அவரது குடும்பத்தினர் மறுக்கவில்லை. 

2) தற்சமயம் அவர் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

3) எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் என பரவிய தகவலை அவரது மகனே தவறு என்று மறுத்துள்ளார். எஸ்பிபி சரண் கூறியதன் பேரிலேயே சினிமா பிஆர்ஓ நிகில் தகவல் பகிர்ந்திருக்கிறார். ஆனால், கொரோனா நெகடிவ் எனக் கூறியது தவறான தகவல் என்று, மீண்டும் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்திருக்கிறார். 

முடிவு: 

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ் என்று கூறி பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False