‘’பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்தது,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

இதில், புதிய தலைமுறை ஊடகம் பெயரில் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன்பேரில், எஸ்பி பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டாரா, எனக் கேட்டு பலரும் நமது வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போல, கடந்த ஆகஸ்ட் 14, 2020 அன்று புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டதா என தகவல் தேடினோம். அப்போது, தங்களது பெயரில் போலி செய்தி பரவுவதாகக் கூறி, புதிய தலைமுறை ஊடகம் மறுப்பு வெளியிட்டிருந்த விவரம் கிடைத்தது.

Puthiyathalaimurai FB Post LinkArchived Link

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் இந்த செய்திக் கட்டுரை வெளியிடும் நொடி வரை உண்மை. மற்றபடி, புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் பகிரப்படும் செய்தி போலியானதாகும்.

UPDATE: மருத்துவமனை சிகிச்சை பலனின்றி எஸ்பி பாலசுப்ரமணியம் 25, செப்டம்பர் 2020 அன்று உயிரிழந்தார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி இது தவறான தகவல் என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False