பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

பாக்யராஜ் தொடர்பான அஜால்குஜால் சமாச்சாரங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயில்வான் ரங்கநாதன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். […]

Continue Reading

FACT CHECK: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கூறினாரா?

எத்தனை தடைகள் வந்தாலும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட நடிகர்  கார்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உண்மை கண்டறிய உதவு வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி இது உண்மையா […]

Continue Reading

FACT CHECK: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு நன்றி தெரிவித்தாரா?

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை தமிழ்த் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வரவேற்று நன்றி தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதா திரைத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அதை நிறைவேற்றினால் காலம் முழுவதும் மத்திய அரசு திரைத்துறையினர் நன்றிக்கடன் […]

Continue Reading

FACT CHECK: திரைத்துறையை விட்டு விலகுவோம் என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்தாரா?

ஒளிப்பதிவு திருத்த மசோதாவைத் திரும்பப் பெறாவிட்டால் பல இயக்குநர்கள், நடிகர்கள் திரைத்துறையை விட்டு விலகுவோம் என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று இயக்குநர் சீனு ராமசாமி புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் […]

Continue Reading

FACT CHECK: ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறினாரா சூர்யா?

மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூரியா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் சூர்யா புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் – நடிகர் சூர்யா” என்று […]

Continue Reading

மாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்?- தயாரிப்பாளர் மறுப்பு!

‘’மாஸ்டர் படம் ஓடிடி முறையில் ரிலீஸ் செய்யப்படுகிறது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த செய்தியை முன்னணி ஊடகங்கள் தொடங்கி தனிநபர் வரையிலும் பலரும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த நவம்பர் 27, 28ம் தேதியன்று இது அதிகபட்சமாக டிரெண்டிங்கில் இருந்தது.  […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ் என்று கூறி பரவும் வதந்தி

‘’எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா நெகடிவ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Lotus News FB Post Link Archived Link உண்மை அறிவோம்: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நலம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது.  சில […]

Continue Reading

நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளை புகைப்படத்தை இணைத்து பகிரப்படும் செய்தியால் குழப்பம்!

‘’அழகை பார்க்காமல் திருமணம் செய்த நடிகர்கள்,’’ எனும் தலைப்பில் நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளையின் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’பணம்தான் முக்கியம் எ ன்று அழகைக் கூட பார்க்காமல் அசிங்கமான நடிகர்களை திருமணம் செய்த நடிகைகள்,’’ எனக் […]

Continue Reading

இயக்குனர் சுந்தரராஜன் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் பரபரப்பு

‘’இயக்குனர் சுந்தரராஜன் மரணம்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இதன்பேரில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே இதுபற்றி சுந்தரராஜன், அவரது மகன் மூலமாக ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் தோன்றி இது […]

Continue Reading

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேத்தி இவரா?

‘’பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேத்தி அமியா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Rajasekaran Rajagopalan என்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில் சிறுமி ஒருவர் யேசுதாஸின் பிரபலமான ஹரிவராசனம் பக்திப் பாடலை பாடுகிறார். அவரை கே.ஜே.யேசுதாஸ் பேத்தி அமியா என இந்த பதிவை வெளியிட்டவர் கூற, பலரும் அது உண்மை என நம்பி லைக், […]

Continue Reading

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு திருமணமா?- ஃபேஸ்புக் செய்தியால் வீண் குழப்பம்!

‘’பெண்களில் கனவுக் கண்ணனுக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதுபற்றி ஃபேஸ்புக் வாசகர்கள் குழப்பமடைந்து கமெண்ட் பகிரவே, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  News Link  Archived Link  BioScope என்ற ஐடி இந்த பதிவை டிசம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில் செய்தித்தளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இந்த செய்தியை […]

Continue Reading

நடிகை சமந்தா பெட்ரூமில் ஆண் சடலம்? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு!

நடிகை சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 “அதிர்ச்சியில் திரையுலகம்! சற்றுமுன்பு நடிகை சமந்தாவின் பெட்ரூமில் ஆண் சடலம்!” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.  அந்த செய்தி இணைப்பில், “சற்றுமுன் சமந்தாவின் படுக்கையறையின் காட்சிகள் […]

Continue Reading

நீ என்ன பத்தினியா என்று கஸ்தூரியை பார்த்து லதா கேட்டாரா?

‘’நீ என்ன பத்தினியா?- பிரபு, சத்யராஜ் உன்ன தடவியது மறந்துபோச்சா கஸ்தூரி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1  Cine Café Link Archived Link 2 Day one cooking tips தினம் ஒரு சமையல் எனும் ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், […]

Continue Reading

சூப்பர் ஸ்டாருடன் இளம் வயதில் நடித்த ஸ்ரீ திவ்யா: ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பும் செய்தி

‘’6 வயதில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த ஸ்ரீதிவ்யா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம் ஒரே செய்தியை பல பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. Facebook Link1 Archived Link1 Facebook Link2 Archived Link2 Facebook Link3 Archived Link3 Facebook Link4 Archived Link4 இவர்கள் அனைவரும் பகிர்ந்துள்ள செய்தி Cine Café என்ற […]

Continue Reading

பாலிவுட்டில் தல அஜித்; அதிர்ச்சியில் இந்திய சினிமா: குழப்பும் செய்தி

‘’பாலிவுட்டில் தல அஜித், அதிர்ச்சியில் இந்திய சினிமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ajithnewz என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு செய்தி லிங்கை பகிர்ந்துள்ளனர். இது https://www.newstig.net/ என்ற இணையதளம் வெளியிட்டதாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இந்த செய்தியின் முழு […]

Continue Reading

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தை ஆதரித்துப் பேசிய மம்மூட்டி: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட போராட்டம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கேரள நடிகர் மம்மூட்டி பேசியதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி சந்தேகம் தெரிவித்து, நமது வாசகர் ஒரு இமெயில் மூலமாக புகார் கூறியிருந்தார். எனவே, இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link சமுத்திரக்கனி என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 15ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. எந்த தேதியில், எப்போது இவ்வாறு மம்மூட்டி பேசினார் […]

Continue Reading

அரசியலுக்கு வரும் முன் போலீஸ் அதிகாரியாக இருந்த சீமான்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்

‘’அரசியலில் குதிக்கும் முன் சீமான் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக இருந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Suresh Thiruvallur என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சீமானின் போலீஸ் சீருடை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதனை உண்மை போல சித்தரித்துள்ளனர். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக […]

Continue Reading

விஜய் படத்தில் படுக்க அழைத்தார்கள்: சர்ச்சையை கிளப்பும் இணையதள செய்தி

விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் என்று பிரபல நடிகை கூறியதாக, இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதே செய்தியை தனது இணையதள பக்கத்திலும் Cinefield.com வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பில் நடிகர் விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் எனக் கூறிவிட்டு, செய்தியின் […]

Continue Reading

பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி சென்ற பிரியங்கா சோப்ரா: குட்டையை குழப்பும் இணையதள செய்தி

‘’பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு இணையதள செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இல்லாமல் தனது கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா.! Behind Talkies என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இணையதளத்தில் வெளியிட்ட இச்செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தும் உள்ளனர். அதனால், நம் கவனத்திற்கு இது […]

Continue Reading