பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

ஆகஸ்ட் 5, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், பழைய மசூதி ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்து, மேலே, ‘’ #ஷஹீதாக்கப்பட்ட

#இறையில்லம்

#பாபர்_மசூதி.

#அன்று_இடித்தவர்கள்

#இன்று_மரியாதை_கண்ணியமிழந்து #காணாமல்_போய்விட்டார்கள்.

#இறந்தும்_போய்விட்டார்கள்.

#இன்று_பூமி_பூஜை_போடுபவர்களும்

#கண்ணியம்_மரியாதையிழந்து

#காணாமல்

#போய்விடுவார்கள்.

#BabriMasjidAwaitsJustice ,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாபர் மசூதி இடிப்பு சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சை தொடர்பானதாகும்.

ஆனால், பாபர் மசூதி தொடர்பான பழைய புகைப்படங்களுக்கும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக உணர முடிகிறது.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என கண்டறிய, அவற்றை ஒவ்வொன்றாக, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். இதன்படி, முதல் புகைப்படம் கர்நாடகாவின் Gulbarga பகுதியில் அமைந்துள்ள Jamia Masjid என தெரியவந்தது.

இதேபோல, இரண்டாவதாக உள்ள புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என தகவல் தேடினோம். அப்போது, இது மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள Motijheel Masjid – Murshidabad எனத் தெரியவந்தது.

மூன்றாவது புகைப்படமும், துருக்கி நாட்டில் உள்ள மசூதி (The Green Mosque, Bursa - Turkey) ஒன்றின் உள்பகுதி தொடர்பானதாகும். இதற்கும், பாபர் மசூதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Google Map பயன்படுத்தி, Bursa Yeşil Cami என்று தேடினால், இதுபற்றி ஏராளமான புகைப்படங்களை காணலாம்.

இதேபோல, அடுத்த புகைப்படமும் பாபர் மசூதி தொடர்பானது இல்லை. அது, ஆப்கானிஸ்தான் நாட்டின் Balk பகுதியில் உள்ள Haji Piyada அல்லது Noh Gonbad mosque ஆகும்.

இறுதியாக உள்ள புகைப்படம் மட்டுமே பாபர் மசூதியுடன் தொடர்புடையதாகும். மசூதி இடிக்கப்படும் முன்பாக, ஜூலை 25, 1992 அன்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, Getty Images தளத்தில் காண கிடைக்கிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களில் ஒன்றே ஒன்றுதான் பாபர் மசூதி தொடர்புடையதாகும். மற்ற அனைத்தும் வெவ்வேறு மசூதிகளின் புகைப்படமாகும்.

எனவே, இந்த ஃபேஸ்புக் பதிவில் உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்கள் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்!

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False