
இவர்கள் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழு பிரதிநிதிகள் என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மை அறிவோம்:
கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற யூடியுப் சேனல் மீது பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இறை பக்தர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கேற்ப, கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலில் பணிபுரிந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் யார் என்று பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நாம் ஆய்வு செய்யும் புகைப்பட பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், இதில் இருப்பவர்கள் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலில் பணிபுரிபவர்கள் இல்லை.
அவர்களை உற்று கவனித்தால், அது ஜிப்ஸி பட ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெளிவாக தெரியவரும். இதில் இருப்பவர்கள் அனைவரும் தமிழகம் அறிந்த முகங்கள்தான். இவர்கள் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழுவினர் கிடையாது. கீழே உள்ள பாடல் காட்சியின்போது எடுத்த புகைப்படம்தான் இது.
இதில் இருப்பவர்கள் யார் என்றும், எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், ஜிப்ஸி பட இயக்குனர் ராஜூ முருகன், அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி மேலும் ஒரு ட்விட்டர் பதிவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, உண்மையான கறுப்பர் கூட்டம் யூடியுப் குழுவினர் வேறு; மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு, என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழு இவர்கள்தான் என்று கூறி பரவும் ‘ஜிப்ஸி’ புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: False
