மு.க.ஸ்டாலின் திருமணம் பற்றி பகிரப்படும் வதந்திகளும், உண்மையும்!

அரசியல் தமிழ்நாடு

‘’மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் வந்ததாகக் கூறப்படும் பொய்ச் செய்தி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

‘’காமராஜர் பிறந்தது 1975, அக்டோபர் 2ம் தேதி; மு.க.ஸ்டாலின் திருமணம் செய்தது அக்டோபர் 20, 1975,’’ என்று தகவல் பகிரப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்ப தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
கர்ம வீரர் என்று அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஜூலை 15 அன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி, அரசியல் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அவரது சாதனைகளை நினைவுகூர்ந்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

இதையொட்டி, திமுக ஆதரவாளர்கள் சிலர் ‘மு.க.ஸ்டாலினின் திருமணம் காமராஜ் தலைமையில்தான் நடைபெற்றது, அவரை கார் வைத்து திருமண மேடைக்கே அழைத்து வந்தார் கருணாநிதி,’ என்று கூறி தகவல் பகிர்ந்திருந்தனர்.

Facebook Claim Link 3Archived Link 3

இந்த தகவலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், பாஜக ஆதரவாளர்கள் பலரும், ‘’ஸ்டாலின் திருமணம் நடந்தது அக்டோபர் 20, 1975; காமராஜர் இறந்தது அக்டோபர் 2, 1975,’’ என்று கூறி தகவல் பகிர்ந்தனர். இதுதான் இந்த சர்ச்சைக்கான பின்னணி.

சரி, விசயத்திற்கு வருவோம். உண்மை என்னவெனில், ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் சென்றது உண்மைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதார புகைப்படத்தை கீழே இணைத்துள்ளோம். கருணாநிதி அருகில் காமராஜர் நிற்பதைக் காணலாம்.

இதுபற்றி அன்றைய தினம் நாளிதழ்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.

ஆனால், இந்த திருமணத்திற்கு, காமராஜர் மேடை வரை காரில் வந்தார், அவரது தலைமையில்தான் திருமணம் நடைபெற்றது என்று கூறப்படுவது தவறான தகவல். திருமணத்திற்கு வந்த விருந்தினர்களில் காமராஜரும் ஒருவர். மேடை வரை காரில் வந்தவர் தடுமாற்றத்துடன் காணப்படும் வி.வி.கிரி; திருமணத்திற்கு தலைமை வகித்தவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவர்.

மு.க. ஸ்டாலின் திருமணத்திற்கு தலைமை வகித்தவர் (நாவலர் நெடுஞ்செழியன்), முன்னிலை வகித்தவர் (க.அன்பழகன்) விவரம் மேற்கண்ட திருமண போஸ்டரிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை விட முக்கியமாக, ஸ்டாலின் திருமணம் நடைபெற்றது 1975, ஆகஸ்ட் 20ம் தேதி ஆகும். இதுவும் மேலே உள்ள திருமண போஸ்டரில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Asianet Tamil News LinkArchived Link

ஆனால், கூகுளில் தேடும்போது, தவறான திருமண தேதி விவரம் கிடைக்கிறது. இதனால்தான், இத்தனை குழப்பமும். 

இறுதியாக, ஒரு விசயம். காமராஜர் இறந்தது அக்டோபர் 2, 1975 என்பது உண்மைதான். அவருக்கான இறுதி மரியாதை அனைத்தும் கிடைக்க முன்னின்று ஏற்பாடு செய்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி என்பதும் சரியே. இதுபற்றி ஏற்கனவே பரவிய ஒரு வதந்திக்கு நாம் விளக்கம் அளித்திருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link

மு.க.ஸ்டாலின் திருமணம் தொடர்பான உண்மை விவரம், திமுகவினருக்கும் தெரியவில்லை; அவர்களின் எதிர்க்கட்சியினருக்கும் தெரியவில்லை; அவ்வளவு ஏன், கூகுளுக்கே தெரியவில்லை என்பதே யதார்த்தம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்திகளில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இதுபோன்ற குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:மு.க.ஸ்டாலின் திருமணம் பற்றி பகிரப்படும் வதந்திகளும், உண்மையும்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply