
திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ கிடைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

முனிவர் போன்று இருக்கும் ஒருவரின் படத்தின் மீது, ஐயன் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ!!! பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்!!! தீ வைத்துக் கொளுத்தப்பட்ட இலங்கை யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து கிடைத்ததாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sasi Kumar என்பவர் ஜூன் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு முன்பு அதாவது கி.மு 31ம் ஆண்டு பிறந்தார் என்று மறைமலையடிகள் கணித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே தமிழர்களுக்கு என்று திருவள்ளுவர் ஆண்டு கணிக்கப்பட்டது. 1971ம் ஆண்டு தமிழக அரசால் இது ஏற்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. 1972ம் ஆண்டுதான் இந்த முறையே நடைமுறைக்கு வந்தது.
கேமராவைக் கண்டறியும் ஓரளவுக்கு வெற்றிபெற்ற முதல் முயற்சி என்பது 1816ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகுதான் கேமரா கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. இப்படி இருக்க, 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் போட்டோ எப்படி கிடைத்தது என்று தெரியவிலை.
திருவள்ளுவரை அனைத்து சமயத்தவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்து மதத்தின் சைவம், வைணம் மட்டுமல்ல… புத்தம், சமணம், கிறிஸ்தவம் கூட திருக்குறள் தங்கள் மதத்தைச் சார்ந்தது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதேநேரத்தில், திருக்குறள் உலகப் பொதுமறை, எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை என்றும் கூறுகின்றனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால், அவருக்கு மத அடையாளம் கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப திருவள்ளுவர் படத்தை வரைந்து வெளியிடுகின்றனர்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்ட திருவள்ளுவர் என்று இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட படம் என்றால் அது வேணுகோபால் ஷர்மா வரைந்த ஓவியம்தான். இது தொடர்பாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஓவியத்தை Yandex இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த படம் பற்றிய உண்மை விவரம் நமக்கு கிடைத்தது.

இந்த படம் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்பக் கழகத்தார் வரைந்த ஓவியம் என்பது தெரிந்தது.

இதன் மூலம், இது திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார் என்பதற்கான மாதிரி ஓவியம் என தெளிவாகிறது. ஆனால், இதனை அவருடைய ஒரிஜினல் போட்டோ எனச் சொல்ல முடியாது. காரணம், அக்காலத்தில் கேமிரா கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன், இது யாழ்ப்பாணம் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டது எனும் தகவலும் தவறு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஃபேஸ்புக்கில் பரவும் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ! – அந்த காலத்தில் ஏது கேமரா?
Fact Check By: Praveen KumarResult: False

It is correct at the same time you post that you research about jesus and his family photos that is original (or) fake