விருதுநகர் – சிவகாசி சாலையின் படம் இது இல்லை!

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

விருதுநகர் – சிவகாசி இடையேயான சாலையின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பிரம்மாண்ட மரத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று வருவது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தில், “விருதுநகர் டூ சிவகாசி சாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sathish Kumar என்பவர் 2020 ஜூலை 8 அன்று இதை பதிவிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர். 

உண்மை அறிவோம்:

மிக பிரம்மாண்ட மரம், மரத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் வெட்டி போக்குவரத்துக்கு வழி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பஸ் அதில் வருவது உண்மையானது போலவே உள்ளது. ஆனால், இப்படி ஒரு பாதை தமிழகத்தில் இருப்பதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. எனவே, வெளிநாட்டு படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிகிறது. ஆனால், இதையும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்திருந்தனர். எனவே, இந்த புகைப்படம் உண்மையானதுதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, படத்தின் பூர்விகம் தெரியவந்தது. pinterest.com, alamy.com உள்ளிட்ட பல இணையதளங்களில் இதன் அசல் படம் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதில் வெளிநாட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

sun-surfer.comArchived Link 1
alamy.comArchived Link 2
pinterest.comArchived Link 3

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ரெட்உட் தேசிய பூங்காவில் உள்ள, டிரைவ் த்ரூ ட்ரீ எனத் தெரியவந்தது. மேலும், இந்த மரம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. 

pinterest.com-ல் கிடைத்த படம் அப்படியே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்துன் பொருந்தியது. இந்த படத்தை எடுத்து எடிட் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை வைத்து பகிர்ந்திருப்பது தெரிகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றின் படத்தை எடுத்து விருதுநகர் – சிவகாசி சாலை என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விருதுநகர் – சிவகாசி சாலையின் படம் இது இல்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False