இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனா சிகிச்சை தொடர்பானது இல்லை!

சமூக ஊடகம் சினிமா

‘’இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனோ சிகிச்சையின்போது எடுத்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

‘’அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமிதாப், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்,’’ என்று இந்த வீடியோ பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பற்றி நிறைய டிரெண்டிங் தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. குறிப்பாக, அமிதாப் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகின்றனர்.

இதன் ஒருபகுதியாகவே, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுளளது.

மேற்கண்ட வீடியோவில், அமிதாப் பச்சன், மருத்துவமனையில் இருந்தபடி பேசுவதைக் காண முடிகிறது. ஆனால், அது தற்போதைய கொரோனா நிகழ்வுடன் தொடர்புடையது இல்லை. 

இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் பகிரப்பட்டதாகும். அப்போது அவர், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் சேவை புரியும் மும்பை நானாவதி மருத்துவமனை ஊழியர்களை பாராட்டி இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதனை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.

இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல, என்று சம்பந்தப்பட்ட நானாவதி மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே, ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. 

HindustanTimes LinkNewIndianExpress Link

தற்போதைய சூழலில், நானாவதி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அமிதாப் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனவே, சில மாதங்களுக்கு முன் எடுத்த வீடியோவை பலரும் உண்மை தெரியாமல் மறுபகிர்வு செய்வதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனா சிகிச்சை தொடர்பானது இல்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •