Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்!

இந்தியா கல்வி சமூக ஊடகம்

வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு ஆசிரியை உதவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தெளிவாக அதில் 10ம் வகுப்பு வாரியத் தேர்வு என்று உள்ளது. நிலைத் தகவலில் “தமிழ்நாடு (vs) வட மாநிலம்…!!! நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம்…!!! தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிட் அடிக்க சுதந்திரம்…!!! தமிழக மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் இதுவே…!!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நிஜத்தின் நிழல் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 13ம் தேதி பகிர்ந்துள்ளது.

Facebook LinkArchived Link

மற்றொரு பதிவில், “வட மாநிலங்களில் நீட் தேர்வு இப்படி நடந்தால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு என்றும் நிறைவேறாது.

If the NEET exam in the northern states happens like this, the medical dream of Tamil Nadu students will not come true” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Mohamed Thameem என்பவர் 2020 செப்டம்பர் 14ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் மிகத் தெளிவாக ஹரியானா மாநிலத்தில் ஜஜ்ஜார் என்ற இடத்தில் 10ம் வகுப்புத் தேர்வின் போது பதில் எழுத மாணவருக்கு உதவிய ஆசிரியை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நிலைத் தகவலில் வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களுக்கு பிரச்னை இல்லை. இல்லை என்றால், இது நீட் தேர்வின் போது எடுக்கப்பட்டது போன்றே தோற்றத்தையே பதிவு ஏற்படுத்துகிறது. இது போன்ற பதிவை பலரும் வீடியோவை நீட் தேர்வில் எடுத்தது என்றே நம்பி ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.

மித்ரன் கிருஷ்ணா என்பவர் இதே வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். பலரும் இது நீட் தேர்வு என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களுக்கு எல்லாம் இது நீட் தேர்வு இல்லை என்று அவர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பதிவில் விளக்கமாக சொல்லியிருந்தால் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் பதில் அளிக்க வேண்டி வந்திருக்காது.

Facebook LinkArchived Link

எனவே, இந்த வீடியோவின் அசலைத் தேடினோம். “hariyana jhajjar school bord exam teacher” என கீவேர்ட் பயன்படுத்தி, தேடியபோது இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட அசல் வீடியோ பதிவு நமக்குக் கிடைத்தது. செய்தியும் கிடைத்தன. 2017ம் ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வின் போது இந்த ஆசிரியர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

hindustantimes.comArchived Link

இதன் மூலம் இந்த வீடியோ நீட் தேர்வின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •