‘விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்’ என்று சீமான் கூறினாரா?
‘’விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’விஜயை கூட்டணிக்கு அழைக்கும் சீமான். விஜய் விரும்பினால் 2026ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; புஸ்ஸிக்கு வேண்டுமானால் நிதித்துறை தருகிறோம்,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பலரும் உண்மை என நம்பி, இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதாக, அறிவிப்பு வெளியிட்டார்.
இதையொட்டி சமூக வலைதளங்களில் விஜய் மீது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதேபோன்று, வதந்திகளும் நிறைய பகிரப்படுகின்றன.
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியும்.
ஆம். உண்மையில் நியூஸ் 18 ஊடகம் வெளியிட்ட செய்தி வேறொன்றாகும்.
உண்மையான நியூஸ் கார்டு மற்றும் போலியான நியூஸ் கார்டு இரண்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:‘விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்’ என்று சீமான் கூறினாரா?
Written By: Fact Crescendo TeamResult: Altered