
பி.ஜே.பி தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரம் தொடர்பான பதிவில் தவறுதலாக ஆபாச வார்த்தை இடம்பெற்றதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
BJP Tamilnadu என்னடா பண்ணி வச்சு இருக்க அட்மின்??
#மீனா
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAnjaasingammarugupaandi%2Fposts%2F317892515539402&width=500″ width=”500″ height=”613″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allow=”encrypted-media”></iframe>
பி.ஜே.பி தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில், “நேற்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களோடு மக்களாக விபசாரம் செய்து தாமரையை மழை செய்யப்போகும் கன்னியாகுமரி வெற்றி வேட்பாளர் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்…” என்று பதிவிட்டதாக அஞ்சாநெஞ்சன் மருகுபாண்டி என்ற ஃபேஸ்புக் குழுவில் ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க.,வின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே இப்படி தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றெண்ணி, 1700-க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் செய்யும் சிறு தவற்றைக் கூட பெரிதுபடுத்திக்காட்டும் வழக்கம் சமூகவலைத்தளங்களில் நிலவுகிறது. இந்த சூழலில், பிரசாரம் என்பதை விபசாரம் என்று பா.ஜ.க கூறிவிட்டதாகத் தகவல் பரவிவருகிறது.
தமிழக பா.ஜ.க ஃபேஸ்புக் பக்கத்தில் தவறுதலாக பதிவிடுவது ஒன்றும் புதியது இல்லை. பி.ஜே.பி தமிழ்நாடு பக்கத்தை ஆய்வு செய்தாலே பல தவறுகளைக் காணலாம். ஆதார படங்கள் கீழே…



இருப்பினும், ‘விபசாரம்‘ என்று கூறும் அளவுக்கு தவறு செய்திருக்க வாய்ப்பில்லை… எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே போட்டோஷாப் செய்து வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது. இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

“நேற்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களோடு மக்களாக” என்று தொடங்கும் வகையில் பி.ஜே.பி தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஏப்ரல் 1ம் தேதி, அஞ்சாநெஞ்சன் மருகுபாண்டி ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டிருந்தது. இதனால், ஏப்ரல் 1ம் தேதி அல்லது அதற்கு முன்பு உள்ள பா.ஜ.க பதிவுகளை ஆய்வு செய்தோம். நம்முடைய தேடலில் ஏப்ரல் 1ம் தேதி வெளியான பதிவு சிக்கியது.
அதில். அஞ்சாநெஞ்சன் மருகுபாண்டி குழு வெளியிட்டது போன்று எதுவும் இல்லை. “மக்களோடு மக்களாக பிரசாரம் செய்து தாமரையை மலரச் செய்யப் போகும்” என்று எல்லாம் மிகச் சரியாகவே இருந்தது.
இருப்பினும், இந்த பதிவின் கமெண்ட் பகுதியை ஆய்வு செய்தோம். அதில், எல்லோரும் தவறாக பதிவிட்டதை சுட்டிக்காட்டியிருந்தனர். பலரும் தவறான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில், பி.ஜே.பி தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்க அட்மின் தவறை சரி செய்திருக்கலாம் என்று தோன்றியது. தவறை திருத்தியதற்கு நன்றி தெரிவித்து சிலர் பதிவிட்டிருந்தனர். ஆதார படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி லைக், கமெண்ட் செய்தவர்கள் யாராவது இந்த பதிவின் எடிட் செய்வதற்கு முந்தைய ஸ்கிரீன்ஷாட் வைத்திருக்கிறார்களா என்று தேடினோம். Basith AB என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் நமக்கு அந்த எடிட் செய்யப்படாத பதிவின் ஸ்கிரீன்ஷாட் கிடைத்தது.
மேலும் வேறு யாரவது ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஹைலைட் செய்யாமல் ஷேர் செய்திருக்கிறார்களா என்று தேடினோம். அப்போது. Imran Khan என்பவர் அஞ்சாநெஞ்சன் மருகுபாண்டி பதிவில் கமெண்டில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பதிவிட்டிருந்தது தெரிந்தது. ஆதார படம் கீழே…

பி.ஜே.பி தமிழ்நாடு பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் கமெண்ட் மற்றும் ஸ்கிரீன்ஷாட் அடிப்படையில் தவறுதலான பதிவு வெளியானது உண்மைதான், தவறு சுட்டிக்காட்டியபிறகு திருத்தப்பட்டது என்பது தெரிகிறது. இருப்பினும் இதை உறுதி செய்ய FotoForensics-ல் படத்தை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முதலில் பா.ஜ.க பக்கத்தில் இருந்து நாமே ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஆய்வு செய்தோம். அதில், படம், டிபி ஆகியவற்றின் பின்னணி நிறம் வண்ணப் புள்ளிகளாக இருந்தன. வார்த்தைகள் இடம்பெற்ற பகுதியின் பின்னணி முழுவதும் கருப்பாகவும், வார்த்தைகள் வெள்ளை நிறப் புள்ளியுடனும் காணப்படுகிறது. வண்ணப் புள்ளிகளில் மாறுதல் ஏதும் இல்லாமல் இருப்பதை காணலாம்.

அஞ்சாநெஞ்சன் மருகுபாண்டி பதிவிட்ட படத்தை FotoForensics-ல் ஆய்வு செய்தோம். அதில், அவர்கள் ஹைலைட் செய்து காட்டிய இடத்தில் மட்டும், ஹைலைட் செய்ததின் அடையாளமாக நிற மாறுதல் தெரிந்தது. மற்றபடி நாம் எடுத்த பதிவில் இருந்ததுபோல லோகோ, படம், வார்த்தைகளின் நிறம் மாறாமல் இருப்பதை காணலாம்.

பின்னர், இம்ரான் கான் என்பவர் பதிவிட்டிருந்த ஸ்கிரின்ஷாட்டை ஆய்வு செய்தோம். அதில், போட்டோஷாப் செய்யப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. லோகோ, வாக்கியம். படம் என அனைத்தின் பின்னணி நிறமும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாக இருந்தன.

நாம் நடத்திய ஆய்வின்படி நமக்குத் தெரியவந்த ஆதாரங்களின் விவரம்:
1) பி.ஜே.பி தமிழ்நாடு பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் கமெண்ட்.
2) நமக்குக் கிடைத்த பல ஸ்கிரீன்ஷாட்கள்.
3) பி.ஜே.பி தமிழ்நாடு பக்கத்தில் பிழையான பதிவுகள் சகஜமானதாக உள்ளது.
4) FotoForensics முடிவு.
இதன் அடிப்படையில், பிரசாரம் என்பதற்குப் பதில் விபசாரம் என்று தவறுதலாக பி.ஜே.பி தமிழ்நாடு பக்கத்தில் வெளியானது உண்மைதான் என்பது உறுதியாகிறது.
முடிவு
பி.ஜே.பி தமிழ்நாடு பக்கத்தில் கவனக்குறைவாக, இத்தகைய ஆபாச பதிவு வெளியானது உண்மைதான். இருப்பினும், தவறு தெரிந்த உடனேயே அதைச் சரிசெய்துள்ளனர். இதை நாம் உரிய ஆதாரங்களுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம்.

Title:ஃபேஸ்புக்கில் ஆபாச வார்த்தையுடன் பதிவிட்ட தமிழக பா.ஜ.க?
Fact Check By: Praveen KumarResult: False
