
‘’எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், த.வெ.க தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாகத் தகவல். ‘’ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் வருத்தம் தெரிவித்ததாகத் தகவல் ” என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி சமீபத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா ஒருமையில் கருத்து தெரிவித்ததாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. இதையடுத்து, ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சூழலில், ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசியதற்காக, எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, விஜய் வருத்தம் தெரிவித்தார், என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது.
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதுகுறித்து, பாலிமர் நியூஸ் தரப்பில் கேட்டபோது, ‘’உண்மைத்தன்மை சரிபார்க்காமல், முதலில் இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்த நிலையில், பிறகு அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து அகற்றிவிட்டோம்’’, என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கூகுளில் தேடும்போது, பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியின் லிங்க் கிடைத்தாலும், அதன் உள்ளே பார்த்தபோது, கன்டென்ட் டெலிட் செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட செய்தி ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று தவெக., தரப்பில் ஏற்கனவே அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததையும் கண்டோம்.
இறுதியாக, எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இவ்வாறு விஜய் எதுவும் பேசவில்லை. இதுபற்றி ஏற்கனவே எங்களது பொதுச் செயலாளர் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்,’’ என்று தெரிவித்தனர்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
News 18 Tamil l Thanthi TV l Dinamani l Daily Thanthi
எனவே, ‘எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த விஜய்’ என்று பகிரப்படும் செய்தி ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா விஜய்?
Written By: Pankaj IyerResult: Misleading
