
உலகின் முதல் ரயில் ஓட்டம் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பழைய காலத்து நீராவி ரயில் பயண வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகின் முதல் ரயில் ஓட தொடங்கியது, சுமார் 211 ஆண்டுகளுக்கு முன்பு 1809 டிசம்பர் 24 ல் வீடியோ பார்க்க வேண்டியது. பயணத்தின் போது சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Covai Velumeenambal Velu என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 ஜூன் 26ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகின் முதல் ரயில் 1825ம் ஆண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு 25 – 30 ஆண்டுகள் கடந்த பிறகே வீடியோ கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது 1825ல் ஓடிய முதல் ரயிலை எப்படி வீடியோ எடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த வீடியோ தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது 1923ம் ஆண்டு வெளியான Our Hospitality என்ற ஆங்கில திரைப்படம் ஒன்றின் காட்சி என்று தெரிந்தது. அந்த திரைப்படம் முழுவதும் யூடியூபில் காணக் கிடைத்தது. அதில், 14வது நிமிடத்தில் இருந்து 20வது நிமிடம் வரை ரயில் பயண காட்சி வருகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் இடம் பெற்ற காட்சிகள் அந்த படத்தில் வருவதைக் காண முடிந்தது.
முதல் ரயில் இயக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அது மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்ததா என்று தெரியவில்லை.
எனவே, முதல் ரயில் ஓட்டம் புகைப்படம் அல்லது ஓவியம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, 1927ம் ஆண்டு ரயில்வே எஜூகேஷன் பீரோ என்ற நிறுவனம் வெளியிட்ட புத்தகத்தில் இடம் பெற்ற முதல் ரயில் ஓட்டம் புகைப்படம் என்று ஒரு படம் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: sbdepotmuseum.com I Archive
முதல் ரயில் எப்போது இயக்கப்பட்டது என்று தேடினோம். நீராவி என்ஜின் 1769ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், 1804ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டதாக தகவல் கிடைத்தன. இதையொட்டி கடந்த 2004ம் ஆண்டில் நீராவி என்ஜின் இரண்டாம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது தொடர்பான பிபிசி செய்தி கிடைத்தது. இந்த ரயில் 1825ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இய்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், முதல் ரயில் இன்ஜின் தற்போதும் வடக்கு இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செய்தியும் கிடைத்தது. முதல் ரயில் ஓட்டம் தொடர்பான வேறு புகைப்படம் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: bbc.co.uk I Archive
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், திரைப்பட காட்சியை உலகின் முதல் ரயில் பயணத்தின் வீடியோ என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உலகின் முதல் ரயில் பயணம் என்று பகிரப்படும் வீடியோ, திரைப்படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உலகின் முதல் ரயில் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
