FACT CHECK: ஸ்டாலினை மிக மோசமாக விமர்சித்து கிருஷ்ணசாமி பேசினாரா?
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை பைத்தியம் என்று டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஸ்டாலினுடைய தோற்றத்தை பார்த்தால் அறிவாளி போல் தான் தெரியும் ஆனால் உண்மையில் அவர் ஒரு பைத்தியக்காரன். மத்திய அரசை ஒன்றிய அரசு என ஸ்டாலின் விமர்சித்ததற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பதில்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Venpura Saravanan என்பவர் 2021 ஜூன் 21ம் தேதி பகிர்ந்திருந்தார். நிலைத் தகவலில், "சங்கிக்கு சொம்படிக்குறதுக்குப் பதில் சங்கியாவே மாறிட்டா சொம்பு மிச்சம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
நியூஸ் கார்டை பார்க்கும்போதே இது போலியானது என்பது தெரிந்தது. வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் என எதுவும் தந்தி டிவி பயன்படுத்தும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. இதையும் கிருஷ்ணசாமி கூறினார் என்று பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் தந்தி டிவி-யில் இந்த நியூஸ் கார்டு வெளியானதா என்று பார்த்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்த போது, இது போலியான நியூஸ் கார்டு என்று குறிப்பிட்டு தந்தி டிவி பதிவிட்டிருப்பது தெரியவந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஒருவேளை கிருஷ்ணசாமி பேட்டி, அறிக்கையில் இப்படி ஏதும் அறிவித்துள்ளாரா என்று பார்த்தோம். யூனியன் கவர்ன்மெண்ட் என்பதை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணசாமி அறிக்கை, பேட்டி அளித்திருப்பது தெரியவந்தது. அதில், ஒன்றிய அரசு என்று அழைத்துவந்தால் தி.மு.க அரசு விரைவில் கலைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாரே தவிர, தனிமனித விமர்சனத்தை செய்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
அசல் பதிவைக் காண: samayam.com I Archive
இதன் மூலம் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஸ்டாலினை மிக மோசமாக விமர்சித்து கிருஷ்ணசாமி பேசினாரா?
Fact Check By: Chendur PandianResult: False