
‘’கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது – அன்வர் ராஜா அதிருப்தி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கொள்கையிலிருந்து விலகுவது ரணமாக்குகிறது
எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா இருவரும் சிறுபான்மை மக்களின் அரணாக நின்று மதவாதிகளிடம் இருந்து பாதுகாத்தனர்; அப்பேர்ப்பட்ட அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகி செல்வது மனதை ரணமாக்குகிறது
புரட்சி தலைவி அம்மா அவர்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுபவர்களோடு இனியும் இணைந்து என்னால் பயணிக்க முடியும் என்று தோன்றவில்லை; காலமறிந்து முடிவெடுப்பேன்!
அமித் ஷா EPS சந்திப்பு பற்றிய கேள்விக்கு அன்வர் ராஜா பதில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது புதிய தலைமுறை பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக, அதிமுக ஐ.டி., பிரிவு நிர்வாகி கௌரி சங்கர் மறுப்பு தெரிவித்து, அவரது X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்தப்படியாக, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு’’, என்று தெரிவித்தார்.
இவற்றின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது என்று அன்வர் ராஜா கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
