FactCheck: எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கருத்து,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ்கார்டு இரண்டுமே தந்தி டிவி லோகோவுடன் இருந்தாலும், அவற்றில் உள்ள ஃபாண்ட், வாக்கிய அமைப்பு போன்றவை போலியானது போல உள்ளன.

எனவே, இதன்பேரில் தந்தி டிவியின் ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம். இவை இரண்டுமே தங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி என உறுதிப்படுத்தினர்.

இதன் அடிப்படையில், இந்த இரண்டு செய்திகளுமே போலியானவை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:எச்.ராஜா தனது தந்தையை போன்றவர் என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply