
‘’விரைவில் திமுகவில் இணையும் விசிக’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ விரைவில் திமுகவில் இணையும் விசிக
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மார்ச் 1ஆம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க திட்டம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
நியூஸ்18 தமிழ்நாடு லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது நியூஸ்18 தமிழ்நாடு பெயரில் பரவும் போலியான ஒன்று என, தெரியவந்தது.
இதுதொடர்பாக, நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் குழு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐடி., பிரிவு ஆகியோரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், இதுபோன்ற எந்த செய்தியும் இதுவரை ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:விரைவில் திமுகவில் இணையும் விசிக என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
