மகளிர் அணி தலைவி குறித்து நடிகை சங்கவியுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விஜய் - சங்கவி நடித்த பழைய திரைப்படம் ஒன்றின் புகைப்படத்துடன் பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், "மகளிர் அணி சங்கவி. மகளிர் அணி தலைவி குறித்து சங்கவி உடன் தளபதி விஜய் கலந்துரையாடல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "மகளிர் அணி தலைவி குறித்து சங்கவி உடன் தளபதி விஜய் கலந்துரையாடல். #BreakingNews #vijaythalapathy. கொளுத்தி போடுவோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை வைத்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் நையாண்டிகளும் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகை சங்கவியுடன் விஜய் ஆலோசனை நடத்தினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாலிமர் தொலைக்காட்சி பிரேக்கிங் செய்தி நியூஸ் கார்டு போல பகிரப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாலிமர் தொலைக்காட்சி என்பது மறைக்கப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டு உண்மையில்லை என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டை பாலிமர் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் அதில் இல்லை. எனவே, பாலிமர் தொலைக்காட்சி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இதை போலியானது என்று உறுதி செய்தார்.

புதிதாகக் கட்சி ஆரம்பித்த விஜய், மகளிர் அணி தொடர்பாக நடிகை சங்கவியுடன் ஆலோசனை செய்தார் என்று நையாண்டிக்காக இந்த நியூஸ் கார்டை உருவாக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை பகிர்ந்திருப்பதன் மூலம் இது உண்மையானதாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா போல சங்கவி வர வாய்ப்புள்ளது என்றால் பலரும் கமெண்ட் செய்திருப்பதன் மூலம் உண்மை என்று கருதி சிலர் கமெண்ட் செய்திருக்க வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கட்சியின் மகளிர் அணி தொடர்பாக நடிகை சங்கவியுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘சங்கவி உடன் விஜய் கலந்துரையாடல்’ என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

Written By: Chendur Pandian

Result: False