தமிழக பாஜகவுக்கு 4 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: உண்மை அறிவோம்

அரசியல் தமிழகம்

‘’தமிழக பாஜக.,வுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Mohan Raj என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட செய்தியை முதலில் தமிழ் ஊடகங்கள்தான் வெளியிட்டன. ஆனால், பிறகு, இதனை தமிழக பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து Jaya Plus, News 18, News 7 உள்ளிட்ட ஊடகங்கள் செய்தியை நீக்கிவிட்டன. எனினும், இதில் News18 வெளியிட்ட செய்தியை நாம் காண முடிந்தது.

News18 Tamil Story Link Archived Link 

இந்த செய்தியை News 18 தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 8ம் தேதி பகிர்ந்திருந்த நிலையில், பிறகு அதனை டெலீட் செய்துவிட்டது.

News18 Facebook Link

இப்படி ஊடகங்களிலும், பிறகு சமூக ஊடகங்களிலும் தகவல் பரவியை தொடர்ந்து ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஜக தமிழக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்தார். 

VanathiSrinivasan Twitter Link Archived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக உள்ளார். அவர் சென்றபின் இதுவரை புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை.
2) பாஜக தமிழக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மேற்கண்ட செய்தியை மறுத்துள்ளார்.
3) பாஜக தமிழக பிரிவுக்கு தலைவர் நியமிக்கப்பட்டால், அதனை அக்கட்சியின் தலைமை முறைப்படி அறிவிக்கும். அதுவரையிலும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக பாஜகவுக்கு 4 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: உண்மை அறிவோம்

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •