
‘’கேரளாவில் இந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ Muslim molested a Hindu girl in Kerala. Immediately all the girls there ganged up on him and beat him. *Our country is changing* This is the trend
கேரளாவில் இந்துப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள்
நம்ம தமிழச்சி களும் இது போல விழித்துக்கொண்டு பதிலடி கொடுக்கும் நாளே பாரதி கண்ட கனவு மெய்ப்படும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2023 ஜனவரி மாதம் கேரள மாநிலம், திரிசூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்தினர் இடையே நிகழ்ந்த மோதல் என்று தெரியவந்தது. இதன்படி, Muriyad பகுதியை சேர்ந்த ஷாஜி என்ற நபருக்கும், Irinjalakuda என்ற இடத்தில் செயல்படும் Emperor Emmanuel Church சேர்ந்த பெண் உறுப்பினர்களுக்கும் இடையே Zion Meditation Center தொடர்பாக நீண்ட நாட்களாக, கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது. மேலும், பெண்கள் சிலரிடம் ஷாஜி தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதன்பேரில், ஷாஜியை குறிப்பிட்ட தேவலாயத்தைச் சேர்ந்த பெண்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதுபற்றி, 2023ம் ஆண்டே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை எடுத்து, தற்போது இந்து – முஸ்லீம் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் மதச்சாயம் பூசி, சமூக வலைதளங்களில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாக, நமக்கு தெளிவாகிறது.
இறுதியாக, நமது மலையாளம் பிரிவினர் ஏற்கனவே இதுபற்றி விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள் என்ற தகவல் உண்மையா?
Written By: Pankaj IyerResult: False
