‘’மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’’ என்று என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

உண்மை அறிவோம்:

இந்திய பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவர் தொடர்பாக நிறைய கேலி, கிண்டல் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் சில பொய்ச் செய்தியாகவும் உள்ளன.

அவை பற்றி நாமும் செய்தி வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு பதிவுதான் மேலே நாம் கண்ட நியூ யார்க் டைம்ஸ் செய்தி படமும்… உண்மையில், இவ்வாறு எந்த செய்தியையும் அந்த ஊடகம் வெளியிடவில்லை.

அவரை கிண்டல் செய்யும் நோக்கில் தயாரித்து பகிர்ந்துள்ளனர். ஆனால், இதனை உண்மை என நம்பி பாஜக.,வினரே ஷேர் செய்ய தொடங்கியுள்ளதால், நாம் இதுபற்றி விளக்கம் தர நேரிட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே நமது ஆங்கில மொழிப் பிரிவினரே ஃபேக்ட்செக் செய்து, வெளியிட்டுள்ளனர். அதனைக் கீழே இணைத்துள்ளோம்.

Fact Crescendo English Link

இதேபோன்று, சில மாதங்கள் முன்பாக மோடி பற்றி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி என்று கூறி தவறான தகவல் ஒன்று பகிரப்பட்டது. அதுபற்றி படிக்க கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.

Fact Crescendo Tamil Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படம் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’ என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: False