இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா?

அரசியல் சார்ந்தவை | Political சர்வதேசம் | International

‘’ இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு,” என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் சன் நியூஸ் வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று, தெரியவந்தது. 

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் என்று முன்னணி ஊடகங்கள் தொடங்கி, தனிப்பட்ட சமூக வலைதள பயனாளர்கள் வரை பலரும் பரபரப்பாக மேற்கண்டவாறு, செய்தி பரப்புகின்றனர். பல்வேறு மொழிகளிலும் இந்த செய்தி பரவுவதால், உடனடியாக இதன்பேரில், இந்திய தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆணையம் (NHAI) மறுப்பு வெளியிட்டுள்ளது. 

அதனை ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம். 

அடுத்தப்படியாக, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக, அதிகாரப்பூர்வமாக மறுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

இது மட்டுமின்றி, மத்திய அரசுக்குச் சொந்தமான PIB Factcheck தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Hindustan Times l ANI News l News On Air 

இவற்றின் மூலமாக, இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இதுவரையிலும் விதிக்கப்படவில்லை, என்று தெளிவாகிறது.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா?

Written By: Pankaj Iyer  

Result: False

Leave a Reply