ஃபேஸ்புக்கில் பரவும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை படம் உண்மையா?

திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குளம் போல காட்சி அளிப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையில் குளம்போல காட்சி அளிக்கும் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணிக்கிறார். வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் பயனில்லாத சாலையாக அது உள்ளது. நிலைத் தகவலில் “திருவனந்தபுரம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அவலநிலை. […]

Continue Reading

நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நிதின் கட்கரி சொன்னாரா?

‘’நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன்,’’ என்று நிதின் கட்கரி பேசியதாக, ஒரு செய்தியை சமயம் தமிழ் இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link Samayam Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனுடன், சமயம் தமிழின் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.  News Link I Archived Link உண்மை அறிவோம்: இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும்போது, நிர்மலா […]

Continue Reading

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்

‘’சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை; மத்திய அரசு அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Balakrishnan Chellaiah என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மாலை முரசு செய்தித்தாளை மேற்கோள் காட்டி, ‘’தமிழன் விழித்துக்கொள்ளும் நாள் எந்நாளோ? (தமிழன் என்ற பெயரில் ஒழிந்திருக்கும் அந்நியரே அதிகம்?) அதனால்தான் […]

Continue Reading

நர்மதா – ஷிப்ரா நதி இணைப்பு நிதின் கட்கரியின் முதல் சாதனையா?

நர்மதா – ஷிப்ரா நதிகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டதாகவும், இது மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும், இதேபோல் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அந்த தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அந்த வீடியோவில் […]

Continue Reading

தமிழக விவசாயிகளுக்காக இந்திய நதிகளை காவிரியுடன் இணைப்போம்: இந்தியா டுடே பேட்டியில் நிதின் கட்கரி சொன்னாரா?

மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து, “விவசாயிகளின் நன்மை கருதி, உடனடியாக, தேசிய நதிகளை காவிரியுடன் இணைத்து, தமிழகம் செழிக்க பாடுபடுவேன்,’’ என்று இந்தியா டுடே டிவியில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, கண்ணீர் மல்க பேசியதாக, சில ஃபேஸ்புக் வதந்திகளை பார்க்க நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Archived Link மேற்கண்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளிலுமே ஒரே விசயத்தைத்தான் கூறியுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு: ***நேற்று […]

Continue Reading

தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்: நிதின் கட்கரி பேசியது உண்மையா?

‘’தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஏப்ரல் 15ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதனை எம்பெட் செய்யக்கூட முடியாதபடி செட்டிங்ஸ் வசதியை மாற்றியமைத்துள்ளனர். அவ்வளவு கவனமாக இருப்பவர் வெளியிடும் தகவலையும் […]

Continue Reading