‘’தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சிறுவன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவன் தனது தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் தலைப்பில், ‘’தெலுங்கானாவில் பள்ளி சிறுவன் மொபைலுக்காக தனது தாய பேட் மட்டையால் அடித்த காட்சி தயவு செய்து பெற்றோர்களின் கவனத்திற்கு 😢🙏 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ காட்சி ஒன்றை எடுத்து, கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது Ideas Factory என்ற ஃபேஸ்புக் சானல் மற்றும் sanjjanaagalrani என்ற நடிகையும் வெளியிட்ட ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது.

FB Post Link l Archived Link

ஆனால், நாம் ஃபேக்ட்செக் வெளியிடும் முன்பே, இந்த வீடியோவை அந்த சானல் டெலிட் செய்துவிட்டது. அதேசமயம், அதன் Archive செய்யப்பட்ட லிங்க் web.archive. org தளத்தின் மூலமாக, நமக்கு கிடைத்தது.


இதுபோன்ற ஏராளமான வீடியோ, விழிப்புணர்வு நோக்கில், அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.


அடுத்தப்படியாக, அவர்களது யூயுடிப் சேனல் பக்கம் சென்று, விவரம் தேடினோம். அங்கேயும் இந்த வீடியோ காண கிடைக்கவில்லை. அதேசமயம், நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் வரும் அதே லொக்கேஷனில் வைத்து, அவர்கள் எடுத்த மற்றொரு வீடியோவின் லிங்க் கிடைத்தது.

இரண்டு வீடியோவிலும் வரும் லொக்கேஷன் ஒன்றுதான். அதனை ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.


எனவே, சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சியை எடுத்து, உண்மையில் நடந்தது போன்று வதந்தி பரப்புகிறார்கள், என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சிறுவன்- வைரல் வீடியோ!
Claimed By :  Social Media User
Fact Check :  MISLEADING