முஸ்லீம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவி செய்யும் திமுக அரசு என்ற தகவல் உண்மையா?

தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா Mr. @mkstalin❓

தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா❓

ஓட்டு போட்ட இந்துக்களுக்கு எல்லோருக்கும் வாயில குல்பி‼️🤗,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2     

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று, தெரியவந்தது. 

கடந்த மார்ச் 03, 2025 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.423.18 கோடி மதிப்பீட்டில் 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதன்போது, இஸ்லாமிய பெண் ஒருவருக்கும், டில்லி பாபு என்கிற மற்றொரு மாற்றுத்திறனாளிக்கும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வாகனத்தையும் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

ETV Bharat l Maalaimalar 

இதன்படி, முதலமைச்சர் தரப்பில் வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்குவது போன்ற புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனை வைத்தே இஸ்லாமியர்களுக்கு திமுக முக்கியத்துவம் தருவதாக, வதந்தி பரப்புகிறார்கள். 

ஆனால், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த திட்டத்தில் பயன்பெற்ற மற்றொரு மாற்றுத்திறனாளி பற்றி தகவல் பகிரப்பட்டுள்ளது. 

எனவே, முஸ்லீம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே திமுக அரசு உதவி செய்வதாகப் பகிரப்படும் தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:முஸ்லீம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவி செய்யும் திமுக அரசு என்ற தகவல் உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading