‘’ ஹமாஸ் வெற்றியை கொண்டாடும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்’’ என்று கூறி , சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில புகைப்படங்கள் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஹமாஸின் வெற்றியைக்

கொண்டாடும் பலஸ்தீன்

கிறிஸ்தவர்கள்..! 🙌❤,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

FB Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் பற்றி விவரம் தேடியபோது, இந்த படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிகழ்வுகள் தொடர்பானவை என்று தெரியவந்தது.

முதலில் உள்ள புகைப்படம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் தொடர்பான ஒன்றுதான். ஆனால், இது நீண்ட காலமாகவே ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது; தற்போது எடுக்கப்பட்டதல்ல.

அடுத்த படம், 2014ம் ஆண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெத்லகேமில் நடத்திய திருப்பலியின் போது, அருட் சகோதரி ஒருவர் பாலஸ்தீன கொடியினை ஏந்தியபோது எடுக்கப்பட்டதாகும்.

Alamy Link

அடுத்த படம், 2018ம் ஆண்டு அருட்தந்தை Abdullah Yulio என்பவர் பாலஸ்தீன கொடியினை ஏந்தியுள்ளவாறு உள்ளதாகும்.

Gettyimages Link

கடைசி படம், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நடைபெற்ற ஞாயிறு திருப்பலியின்போது இஸ்ரேல் ராணுவத்தினரால் பாலஸ்தீன கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

Christiantoday Link l imemc.org link

இதன்படி, வெவ்வேறு கால கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போதைய இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram-

Avatar

Title:ஹமாஸ் வெற்றியை கொண்டாடும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் என்று பரவும் படங்கள் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False