நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயி மகள்: வைரல் புகைப்படம் உண்மையா?

சமூக ஊடகம்

‘’நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயியின் மகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\neet 2.png

Archived Link

Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூன் 6ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்தாலே, பொழுதுபோக்கிற்காக பகிரப்பட்ட பதிவாக தெரிகிறது. ஆனால், இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இது குழப்பம் ஏற்படுத்தும் தகவலாக, விஷமத்தனமாக உள்ளதென்று கூறி, இதுதொடர்பாக ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். இதன்பேரிலேயே, இதுபற்றி விரிவாக ஆய்வு செய்ய நேரிட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பதிவில், இவர் நீட் தேர்வில் அதிக புள்ளி எடுத்து சாதனை செய்த விவசாயியின் மகள். வாழ்த்துகள், என்று மொட்டையாக குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் யார், என்ன விவரம் போன்ற எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

C:\Users\parthiban\Desktop\neet 3.png

இந்த புகைப்படத்தை, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது கடந்த சில ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் புகைப்படம் என்றும், யாரோ ஒரு தனிப்பட்ட நபரின் புகைப்படத்தை எடுத்து, சமூக ஊடக பயனாளர்கள் லைக், ஷேர் பெறுவதற்காக, தவறான முறையில் தகவல் பரப்பி வருகிறார்கள் என்றும் தெளிவாக தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\neet 4.png

எனவே, அடிப்படை ஆதாரமற்ற ஒரு தவறான பழைய புகைப்படத்தை ஆதாரமாக வைத்து, சமூக ஊடகங்களில் இப்படி வதந்தி பரப்புவது சிலரின் வாடிக்கையாக உள்ளது. அதில் ஒன்றுதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்பட பதிவும் என சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதுதவிர 2019 நீட் தேர்வில் யாரேனும் விவசாயி மகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளாரா என தகவல் தேடினோம். அதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக, தகவல் தெரியவந்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, உண்மையான தகவல் வேறொன்றாகவும், இவர்கள் பரப்பியுள்ள வதந்தி வேறொன்றாகவும் உள்ளதாக, தெரியவருகிறது. எனவே, இது வீண் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தவறான பதிவு என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, ஒரு பழைய புகைப்படத்தை வைத்து தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயி மகள்: வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •