‘’ மதுவிலக்குச் சட்டத்தை நீக்க குஜராத் அரசு முடிவு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

இவ்வாறு சமீபத்தில் குஜராத் மாநில அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டதா என்று நீண்ட நேரம் ஆதாரம் தேடினோம். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டதாகச் செய்தி ஆதாரம் ஒன்று கூட கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக, இதுபற்றி மாலைமலர் ஊடகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்களது ஆசிரியர்கள் குழு தரப்பில், இது போலியான செய்தி, என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உண்மையான நியூஸ் கார்டு லிங்க் தரப்பட்டது.

எனவே, இதனை எடிட் செய்தே மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதேபோன்று, தந்தி டிவி லோகோவுடன் ஒரு செய்தி பகிரப்படுகிறது. அதுவும் போலியான செய்திதான்.

எனவே, நாம் ஆய்வு செய்த தகவல், அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: ‘மதுவிலக்குச் சட்டத்தை நீக்க குஜராத் அரசு முடிவு’ என்று பரவும் வதந்தி…

Written By: Fact Crescendo Team

Result: ALTERED