தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் மலேசிய அரசு வெளியிட்ட வீடியோ இதுவா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

‘’மலேசிய அரசு தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் வெளியிட்ட வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *சாதாரண தண்ணீரை விட சோப்புத் தூள் கலக்கப்பட்ட தண்ணீர் எப்படி பட்ட தீயாக இருந்தாலும் எரியும் போது மற்ற இடங்களுக்கு பரவாமல் சுலபமாக அணைக்கும் என்று  கண்டறிந்து மலேசியா  தீயணைப்புத்துறை  தீபாவளி பண்டிகைக்கு  வெளியிட்டுள்ளது*’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இந்த வீடியோவில் பேசும் நபரின் மீது எழுதப்பட்டுள்ள Bpk. Untung, Petugas Damkar BP Batam என்ற எழுத்துகள், அவருக்குப் பின்னால் நிற்கும் வாகனங்கள், கட்டிடம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தகவல் தேடினோம். 

அப்போது, இந்த வீடியோ இந்தோனேசியாவில் உள்ள Batam எனும் இடத்தில் செயல்படும் தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்தில் எடுக்கப்பட்ட ஒன்று, என தெரியவந்தது. மேலும், இது சிங்கப்பூருக்கு மிக அருகாமையில்தான் அமைந்துள்ளது. BP Batam என்றால், Badan Pengusahaan – Batam என்று அர்த்தம். 

இந்த வீடியோவில் இருப்பவர் Doni Masrul (Sikumbang) என்பவர் ஆவார். முதலில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவரும் அவரே. மேலும், இவர் BP Batam  தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார். வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் அவரது புரொஃபைல் அடிப்படையில் இதனை நாம் எளிதாக, உறுதி செய்ய முடிகிறது.  

இதுதவிர குறிப்பிட்ட வீடியோவை இவர் பொது மக்கள் விழிப்புணர்வு நோக்கில் மட்டுமே கடந்த ஆகஸ்ட் 8, 2024 அன்று பகிர்ந்துள்ளார். இதற்கும், தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தீபாவளிக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று அவர் கூறவும் இல்லை. முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்தோனேசியா நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘மலேசிய அரசு வெளியிட்ட தீபாவளி விழிப்புணர்வு வீடியோ’ என்று கூறி, வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:தீபாவளி விழிப்புணர்வு நோக்கில் மலேசிய அரசு வெளியிட்ட வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context