
‘’பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’’ என்று ஐரோப்பா அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ *இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.*
*உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பயங்கரவாதி என்று எழுதப்பட்ட ஃபிரேம் ஒன்றை சிலர் திறந்து வைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளை கவனமாக பார்வையிட்டோம்.
அப்போது, இதில் வரும் ஒரு வயதான நபர் பார்ப்பதற்கு, பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் போன்று உள்ளதைக் கண்டோம்.
மேலும், ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த 2020ம் ஆண்டே பிரிட்டன் (Brexit) வெளியேறிவிட்டது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில், நெதன்யாகுவை பயங்கரவாதி என்று ஐரோப்பா அறிவித்ததாகக் கூறி, (சார்லஸ் வீடியோவை இணைத்து, முன்னுக்குப் பின் முரணாக, தகவல் பகிர்ந்துள்ளனர்.
இவை எல்லாம் நாம் ஆய்வு செய்யும் வீடியோ பற்றி கூடுதல் கூடுதல் சந்தேகம் ஏற்படுத்துவதாக உள்ளன.
எனவே, சார்லஸ் பெயரை மையமாக வைத்து தகவல் தேடினோம். அப்போது, சில மாதங்களுக்கு முன்பாக, பிரிட்டன் அரண்மனையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் ‘The Royal Family Channel’ வெளியிட்ட ஒரு வீடியோ லிங்க் கிடைத்தது. அதில், மூன்றாம் சார்லஸ் (மன்னராக) முடி சூட்டிய பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை வெளியிட்ட காட்சி என்று கூறப்பட்டிருந்தது.
இதன்மூலமாக, மூன்றாம் சார்லஸ் அவரது படத்தையே திறந்தார்; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படத்தை அல்ல என்று நமக்கு தெளிவாகிறது. முழு வீடியோ லிங்க் இதோ…
இதுபற்றி ஊடகங்களிலும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது.
Associated Press l CNN l Sky News l BBC
உண்மையான காட்சியையும், எடிட் செய்யப்பட்ட காட்சியையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்ததாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’ என்று ஐரோப்பா அறிவித்ததா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
