இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu


‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook claim Link l Archived Link 

இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோ பற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தகவல் தேடியபோது, இந்த வீடியோவை, கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கம் ஒன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டோம். அந்த பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவிலேயே விருந்தின் விவரம், பங்கேற்ற நபர்களின் பெயர் என அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tamil Culture Waterloo Region என்ற அந்த ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தபோது, இது கனடாவில் செயல்படும் ஒரு தமிழ்ச்சங்கம் என்று தெளிவான விவரம் கிடைத்தது.

அடுத்தப்படியாக, இந்த விருந்தில் பங்கேற்ற அப்பகுதி மேயர் ஒருவரின் ட்வீட் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

அவரது ட்வீட் பற்றிய விவரம் கீழே…

எனவே, கனடா நாட்டில் நிகழ்ந்த ஒரு விருந்தின் புகைப்படத்தை எடுத்து, இது இங்கிலாந்து நாட்டின் பிரதமர் அளித்த விருந்து என்று குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமன்றி உறுத செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

Fact Check By:  Fact Crescendo Team 

Result: MISLEADING