
‘’பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை…👌🙏🙏
திராவிட திருடர்களை விரட்டுவோம் தமிழகத்திலிருந்து
@HRajaBJP
@umaanandansays
@imkarjunsampath
#tnbjp #bjptamilnadu
#HRaja #BJP #Annamalai,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
இதே புகைப்படத்தை, Indu Makkal Katchi (off) தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதையும் கண்டோம்.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2012ம் ஆண்டு மே 10 அன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற பிரம்மோத்சவ தேர்த் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படம் என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக, பல்வேறு பதிவுகள் Flickr இணையதளத்தில் காண கிடைக்கின்றன.
அதேசமயம், கடந்த நவம்பர் 3, 2024 அன்று இந்து மக்கள் கட்சி சார்பாக, அர்ஜுன் சம்பத் தலைமையில், சென்னை ராஜரத்தினம் திடலில் நடைபெற்ற பிராமணர்கள் பேரணி தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வேறொன்றாக உள்ளன.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
News Link 1 l Link 2 l Link 3 l Link 4
உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட வேறொரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘பிராமணர்களின் எழுச்சி.. தமிழகத்தில் முதல்முறை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
