
‘’ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தும் நிலையில் அங்கு வசித்து வந்த பாகிஸ்தானியர் அதிகமானோர் பாகிஸ்தானுக்கு டஃப்டன் வழியாக திரும்பி வருகின்றனர் ஆனால் அதைப் பயன்படுத்தி ஈரானியர்கள் யாரும் உள்ளே வந்து விடாமல் ரொம்ப ஜாக்கிரதையா பாதுகாக்கிறது pak 🤣,” என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் மக்கள் கூட்டமாக நுழைவது போன்ற காட்சிகள் கொண்ட ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இதற்கும் தற்போதைய ஈரான் – இஸ்ரேல் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.
ஆம், குறிப்பிட்ட வீடியோ கடந்த 2023ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்று.
பாகிஸ்தான் மக்கள், பலுசிஸ்தானில் உள்ள Taftan வழியாக, ஈரான் சென்று, ஆன்மீக யாத்திரை, வர்த்தகம் மேற்கொள்வது வழக்கம். இதன்போது, அவர்களிடம் Taftan சோதனைச் சாவடியில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடர்பான ஒரு வீடியோ கடந்த 2023ம் ஆண்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதே வீடியோவை சமூக வலைதள பயனாளர்கள், reference மற்றும் fileshot முறையில் அவ்வப்போது மறுபகிர்வு செய்வதையும் காண முடிந்தது.
இதனையே தற்போது மீண்டும் புதியது போன்று, ஈரான் – இஸ்ரேல் மோதலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள்.
Dawn l News9 l Tribune l 24 News HD
அதேசமயம், ஈரானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவது உண்மைதான். அவற்றுக்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
