கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர் 

ராஜினமா ஏற்க மறுத்தால் அழுகை,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தங்களது தேசியக் கொடி ஏந்தியபடி நிற்க, மேலே பாகிஸ்தான் வீரர் ஒருவர் கண்ணீர் சிந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த செப்டம்பர் 2, 2024 முதலாகவே, குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். இந்த வீடியோவை, பாகிஸ்தான் ராணுவ ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று முதன்முதலாக பகிர்ந்துள்ளது. அதற்கு, ‘’நமது சகோதரர் முதன்முதலாக, விமானத்தில் பயணிக்கும் மகிழ்ச்சியில், குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பி நிற்கிறது,’’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. 

https://www.facebook.com/share/v/15oVVdxu9C

இது மட்டுமின்றி குறிப்பிட்ட வீடியோவை நாமும் முழுவதாக பார்த்தபோது, அதில் அவர் பயத்தில் அழவில்லை; மாறாக, கண்களில் நீர் ததும்ப, மகிழ்ச்சியில் சிரிப்பதைக் காண முடிகிறது. 

இதன் அடிப்படையில், பழைய வீடியோ ஒன்றை எடுத்து, தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுடன் தொடர்புபடுத்தி, வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Written By: Pankaj Iyer  

Result: False

Leave a Reply