FactCheck: திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் இதுவா?

இந்தியா சமூகம் தமிழ்நாடு

‘’திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

மேற்கண்ட புகைப்பட தகவலை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, வாட்ஸ்ஆப் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் இந்த தகவல் வைரலாக ஷேர் செய்யப்படுவதைக் கண்டோம்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

உண்மை அறிவோம்: 

குறிப்பிட்ட புகைப்பட செய்தியில் கூறப்படுவது போல, திப்பு சுல்தான் காலத்தில் கேமிரா எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. திப்பு சுல்தான் 1799ம் ஆண்டில் பிரிட்டிஷாருடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். அதன் பிறகு, சுமார் 80 ஆண்டுகள் கழித்தே, உலகில் முதல் முறையாக, கேமிரா பயன்பாட்டிற்கு வந்தது.

History of the Camera

ஆனால், இது புரியாமல், சமீப காலமாக, திப்பு சுல்தானை குறி வைத்து, ஒரு தரப்பினர் இணையதளத்தில் காண கிடைக்கும் சில புகைப்படங்களை எடுத்து, உண்மை போல ஷேர் செய்வதை வழக்கமாகச் செய்கிறார்கள். நாமும் ஏற்கனவே இதுபோன்ற தகவல்கள் பற்றி ஆய்வு செய்திருக்கிறோம்.

Fact Crescendo Tamil 1

Fact Crescendo Tamil 2

இந்த வரிசையில் பகிரப்பட்டு வரும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவலும். ஆம், இதில் இருப்பவர் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சான்சிபார் பகுதியை சேர்ந்த Tippu Tip என்ற அடிமை வியாபாரி ஆவார். இவரது காலம் கி.பி 1832 முதல் 1905 வரை ஆகும்.

GettyImages Link 

இது மட்டுமின்றி The Illustrated London News இவர் பற்றி 1880களில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Wikimedia link

எனவே, திப்பு சுல்தான் 18ம் ஆண்டில் மறைய, இவர் 19ம் ஆண்டில் வாழ்ந்திருக்கிறார். இருவரது பெயரும் திப்பு என்று ஆரம்பிப்பதால், மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் இவராக இருக்குமோ என்று உறுதிப்படுத்தாத தகவலை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து, சமூக வலைதள பயனாளர்களை குழப்புவதாக சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False