FACT CHECK: தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று ஜோதிகா கேள்வி எழுப்பினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று கேட்ட ஜோதிகா, சென்னையில் ரூ.2500 கோடி செலவில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வாய் திறக்காதது ஏன் என்ற வகையில் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் ஜோதிகா அப்படி பேசினாரா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஜோதிகா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு செலவு எதற்கு? =ஜோதிகா. சென்னையில் ரூ.2,500 கோடியில் நான்கு புதிய பூங்காக்கள் அமைய உள்ளது!! = KN நேரு. இந்த அம்மையார் மீண்டும் தமது ஞானக் கண்களால் , உற்று நோக்கி உடனே ஒரு அறிக்கையையும் தர வேண்டும்… #மக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sami Nathan என்பவர் 2021 ஜூலை 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2020ம் ஆண்டில் தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா தவறாக பேசிவிட்டார், கோவிலுக்கு செலவு செய்யக் கூடாது என்று கூறிவிட்டார் என சமூக ஊடகங்களில் தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஜோதிகாவை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

நீட் தேர்வு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு மக்கள் தங்கள் கருத்தை அனுப்ப வேண்டும் என்றும் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா பற்றியும் சூர்யா கருத்து கூறியிருந்த நிலையில் அவரது குடும்பத்தினரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவு வெளியாகி வருகிறது.

இந்த சூழலில் ஜோதிகா பெயரில் பரவும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். இதற்கு ஜோதிகா பேசிய விருது வழங்கும் விழா வீடியோவை தேடி எடுத்தோம். 2020ம் ஆண்டு ஜூலை மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த “JFW Awards Movie 2020” வீடியோ நமக்கு கிடைத்தது. 18.30 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவை பார்த்தோம். அதில், 11.38வது நிமிடத்தில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அதில், “ராட்சசி படத்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதனால் இந்த தகவலை நான் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும். தஞ்சாவூர் போனபோது எல்லோரும் தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தீர்களா… பிரகதீஷ்வரா கோவில், அது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், அதை பார்க்காமல் போகாதீர்கள் என்றார்கள். அந்த கோவில் அவ்வளவு அழகு கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார்கள். ஏற்கனவே அதை நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு அழகாக இருக்கிறது. உதய்பூரில் இருக்கும் அரண்மனைகளை பராமரிப்பது போல அழகாக பராமரிக்கிறார்கள். 

அசல் பதிவைக் காண: Youtube I dinamani.com I Archive

அதற்கு அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு ஒரு அரசு மருத்துவமனையில் நடந்தது. மிக மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தது. அங்கு பார்த்ததை எல்லாம் என் வாயால் சொல்ல முடியாது. ஒரு வேண்டுகோள், ராட்சசியில் கூட இதை சொல்லியிருக்கிறேன்… கௌதம் (படத்தின் இயக்குநர்) சொல்லியிருக்கிறார். கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க, அவ்வளவு செலவு செய்றீங்க, பெயிண்ட் அடிக்கிறீங்க, மெயின்டெய்ன் பண்றீங்க, கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க, தயவு செய்து அதே காசை அரசு கட்டிடங்களுக்கும் செலவு செய்யுங்கள், பள்ளிகளுக்கு கொடுங்கள், அரசு மருத்துவமனைக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியமானது. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உண்மையில் அதன் பிறகு அந்த கோவிலுக்கு நான் போகவில்லை. அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு அந்த கோவிலுக்கு போகவில்லை” என்றார்.

எந்த இடத்திலும் கோவிலுக்கு பணம் கொடுக்காதீர்கள், கோவில் உண்டியலில் பணத்தை போடாதீர்கள் என்று கூறவில்லை. கோவிலுக்கு செலவு செய்வது போல அரசு பள்ளி, மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யுங்கள் என்று மட்டுமே கூறியிருந்தார். இதன் மூலம் தஞ்சாவூர் பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்காக என்று ஜோதிகா கேள்வி எழுப்பவில்லை என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive

நம்முடைய தேடலின் போது தஞ்சாவூர் மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் உதவி வழங்கினார் என்ற செய்தியும் கிடைத்தது. மேலும், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு படப்பிடிப்புக்கு வந்தது பற்றி அந்த படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த விளக்கமும் நமக்கு கிடைத்தது.

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdirectorerasaravanan%2Fposts%2F2659003681011734&show_text=true&width=500″ width=”500″ height=”783″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரூ.2500 கோடியில் நான்கு பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினாரா என்று பார்த்தோம். அதில் எண்ணூர், கோவளம், முட்டுக்காடு, பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் போன்ற பகுதிகளையும் இதே போன்று உருவாக்குவதற்காகப் பல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. கூவமும் அடையாற்றிலும் மரங்கள் அடர்ந்த பகுதியாக உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவற்றை எல்லாம் சரி செய்வதற்கு உத்தேசமாக ரூ.2500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை” என்று கூறுவதைக் காண முடிந்தது.

தோராய மதிப்பீடு பற்றி மட்டுமே அமைச்சர் சொல்கிறார். திட்டம் தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று அவர் கூறவில்லை. ஒரு திட்டம் பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது போன்று கருத்து வெளியிட்டுள்ளனர். 

நம்முடைய ஆய்வில் தஞ்சை பெரிய கோவிலை பராமரிப்பு செலவு எதற்கு என்று ஜோதிகா கேள்வி எழுப்பியதாகப் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று நடிகை ஜோதிகா கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு செலவு எதற்கு என்று ஜோதிகா கேள்வி எழுப்பினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context