நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Claim Link l Archived Link

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

கேரளா சென்றுள்ள விஜய்க்கு இவ்வாறு அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷம் செய்துள்ளதாகக் கூறி, இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடியபோது, குறிப்பிட்ட வீடியோவில் இருப்பவருக்கும், தமிழ் நடிகர் விஜய்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளதைக் கண்டோம்.

அத்துடன், இந்த வீடியோ கர்நாடகா மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்றும், இதில் இருப்பவர் கன்னட நடிகர் Duniya Vijay என்றும் விவரம் கிடைத்தது.

எனவே, கன்னட நடிகரின் வீடியோவை எடுத்து, தமிழ் நடிகர் விஜய் சமீபத்தில் கேரளா சென்றதை விமர்சிக்கும் வகையில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False