
‘’மதுரை மேயர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட எனக்கு சீட் தரவில்லை என்று மாரிதாஸ் வேதனை தெரிவித்தார்,’’ எனக் கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி தனித்துப் போட்டியிடுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
Vikatan Link I Hindu Tamil Link
இந்த சூழலில் பாஜக.,வை ஆதரித்து யூடியுப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு வரும் மாரிதாஸ், மதுரை மேயர் பதவிக்கு, பாஜக சார்பாக போட்டியிட சீட் கேட்டதாகவும், அதனை அக்கட்சி நிராகரித்து விட்டதாகவும் கூறி கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக, மேற்கண்ட நியூஸ் கார்டு பரவுகிறது. ஆனால், இது போலியானது என்று கதிர் நியூஸ் மறுத்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:மதுரை மேயர் பதவிக்கு மாரிதாஸ் முயற்சி என்று கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
