‘’இரவு நேரத்தில் சூரியனுக்கு ராக்கெட் அனுப்புங்கள்’’ என்று இஸ்ரோவுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட செய்தி பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதனையும் சிலர் உண்மை என நம்பி மற்றவர்களுக்கு பகிர்கின்றனர். குஜராத் பாஜக தமிழ் மொழியில் ட்வீட் வெளியிட வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, இதுபற்றி நமது குஜராத் பிரிவினர் உதவியுடன், குஜராத் மாநில பாஜக.,வை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள் ‘’இவ்வாறு நாங்கள் எந்த பதிவும் வெளியிடவல்லை,’’ என்றனர்.

இதேபோல, இவ்வாறு மோடி உத்தரவிட்டதாக எந்த செய்தியும் ஊடகங்களில்கூட வெளியாகவில்லை.

எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘இரவு நேரத்தில் சூரியனுக்கு ராக்கெட் அனுப்புங்கள்’ என்று இஸ்ரோவுக்கு மோடி உத்தரவிட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False