‘The Oxford History of World Cinema’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர் என்பது உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’The Oxford History of World Cinema என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவலில் கூறப்பட்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடினோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே 2022ம் ஆண்டு ஒரு செய்தி வெளியானதையும் கண்டோம். 

எனவே, இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் தொடர்ந்து தகவல் தேடினோம். அப்போது, குறிப்பிட்ட புத்தகத்தின் PDF வடிவம் கிடைத்தது. 

Oxford History of World Cinema PDF 

அதில் விவரம் பார்த்தபோது, இந்தியாவில் இருந்து எம்ஜிஆர் மட்டுமல்ல; நர்கீஸ், சத்ய ஜித்ரே, அமிதாப் பச்சன், ராஜ் கபூர் போன்ற நடிகர், நடிகையர் பெயரும், அண்ணா, கருணாநிதி போன்ற கதாசிரியர்கள் பெயரும் இடம்பெற்றதைக் கண்டோம். 

குறிப்பிட்ட புத்தகம் அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 

Amazon link

எனவே, 1996ம் ஆண்டு வெளியிடப்பட்ட மேற்கண்ட புத்தகத்தில் ஏராளமான இந்திய சினிமா நட்சத்திரங்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால், எம்ஜிஆர் பெயர் மட்டுமே உள்ளதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: ‘The Oxford History of World Cinema’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர் என்பது உண்மையா?

Written By: Fact Crescendo Team 

Result: False