அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அண்ணாமலை தோற்றதால் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட பாஜக தொண்டர் கட்டெறும்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஆணுறுப்பை அறுத்த பாஜக தொண்டன். அண்ணாமலையின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தொண்டர் இசக்கி என்கிற கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்து தற்கொலை முயற்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

தந்தி டிவி லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த சூழலில், தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் களம் கண்ட பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, பாஜக மற்றும் அதன் தலைவர்கள், உறுப்பினர்களை கேலி செய்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Hindu Tamil Link l Dinamani Link 

இந்த வரிசையில் மேற்கண்ட செய்தியும் ஒன்றாக பகிரப்படுகிறது. 

குறிப்பிட்ட செய்தி உண்மையா என்று நாம் தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது லோகோவை பயன்படுத்தி யாரோ ஒருவர் வேண்டுமென்றே தயாரித்துள்ள போலியான செய்தி,’’ என்று கூறினார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?

Written By: Fact Crescendo Team 

Result: Altered

Leave a Reply