FactCheck: குஜராத்தில் குடிபோதையில் பிடிபட்ட ராகுல் காந்தி?- பெயர் குழப்பத்தால் சர்ச்சை…

அரசியல் | Politics சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

‘’குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடிபோதையில் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

இவர்கள் அனைவருமே கதிர் செய்தி இணையதளம் வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக வைத்தே குறிப்பிட்ட தகவலை பகிர்ந்து வருவதையும் கண்டோம்.

Kathir News FB Post LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியில் குறிப்பிடப்படுவது போல, குஜராத் மாநிலத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நபர் யார் என தகவல் தேடினோம். அப்போது அவர் வேறொரு ராகுல் காந்தி என்றும், பெயர் ஒரே மாதிரி உள்ளதால் ஏற்பட்ட குழப்பத்தின் அடிப்படையிலும், அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட செய்தியில் மொட்டையாக ராகுல் காந்தி எனக் குறிப்பிட்டு, சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

India Today Link I Opindia Link I English.newstracklive.com Link I Samacharagat Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:குஜராத்தில் குடிபோதையில் பிடிபட்ட ராகுல் காந்தி?- பெயர் குழப்பத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context