FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

நகைச்சுவைக்காக பகிரப்பட்டுள்ள இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆபாசமாக வீடியோ கால் செய்த விவகாரம் காரணமாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அவரது பதவியை ராஜினாமா செய்தார். அவரது வீடியோ காலை பதிவு செய்து, வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா உள்ளிட்டோர் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்கவும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

Maalaimalar Link I News18 Tamil Link

ஆகஸ்ட் 24, 2021 அன்று இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி தினமலர் நாளிதழ் மேற்கண்ட வகையில் செய்தி வெளியிட்டதாகக் கேலி செய்து பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில், இவை அனைத்தும் கேலி, கிண்டலுக்காக பகிரப்படும் போலிச் செய்திகள் மட்டுமே. தினமலர் இப்படியான செய்தி எதுவும் கே.டி.ராகவன் விவகாரத்தில் தலைப்புச் செய்தியாக முகப்பு பக்கத்தில், சமீப நாட்களில் வெளியிடவில்லை.

இதில், ஆகஸ்ட் 24, 2021 அன்று சென்னை பதிப்பில் வெளியான தலைப்புச் செய்தியை எடுத்து, எடிட் செய்து இவ்வாறு போலிச் செய்தி உருவாக்கியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதேபோல, மற்றொரு போலிச் செய்தியும் தினமலர் லோகோவுடன் பகிரப்படுகிறது. அதுவும் தவறாகும். புகைப்படம், மற்றும் தலைப்பை மட்டும் எடிட் செய்தவர்கள், உள்ளடக்கச் செய்தியை மாற்றாமல் அப்படியே விட்டுள்ளனர். உள்ளடக்கச் செய்தி கொரோனா ஊரடங்கு காலத்தில் தரப்படும் இ-பாஸ் தொடர்பானதாக உள்ளது.

உண்மையில், ஆகஸ்ட் 24, 2021 அன்று கே.டி.ராகவன் வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

Dinamalar News Link

எனவே உரிய ஆதாரங்களின் அடிப்படையில் கே.டி.ராகவன் பற்றி பகிரப்படும் மேற்கண்ட செய்திகள் போலியானவை என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

  1. அது போலின்னு தெரியும் ஆனால் தினமலம் இப்படிதான் மற்றவர்களாக இருந்தால் வெளியிட்டுப்பான் அவன் சாதிக்காரன் என்பதால் மூடிக்குட்டி இருப்தான் அதான் எடிட் செய்து போட்டதை பகிர்ந்தோம்

Comments are closed.