முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

இந்த புகைப்படத்தை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதில் முரசொலி மாறனுடன் இருப்பர் யார், என சந்தேகம் கேட்டிருந்தார்.

மேலும், ஃபேஸ்புக்கில், ‘இதில் இருப்பவர் அர்ஜூன மூர்த்தி,’ என்றும், ‘அவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தார்,’ என்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வதாக, வாசகர் குறிப்பிட்டிருந்தார். 

இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும், முரசொலி மாறனின் உதவியாளராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார் எனக் கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
சமீபத்தில் கட்சி தொடங்கப் போவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அப்போது, தனது புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்பவர் செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

The Week LinkArchived Link

இதைத்தொடர்ந்து, அர்ஜூன மூர்த்தி பற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் ஒன்றுதான் அவர், முரசொலி மாறனிடம் ஆலோசகராக பணிபுரிந்தார் எனக் கூறி பகிரப்படும் தகவலும். 

உண்மையில், இது தவறான தகவல் என்று, முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

Archived Link 

Maalaimalar News LinkTOI Link 

எனவே, முரசொலி மாறனிடம் அர்ஜூன மூர்த்தி பணிபுரியவில்லை என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது. அதேசமயம், தயாநிதி மாறனுடன் புகைப்படத்தில் இருப்பவர் யார் என விவரம் தேடினோம். அப்போது, அவரது பெயர் நந்திவர்மன் என்றும், திராவிட பேரவை அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர் என்றும் தகவல் தெரியவந்தது.

அவரே இதுபற்றி தனது பிளாக்கில் விரிவாக விளக்கம் தெரிவித்து தகவல் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

Nandhivarman Blog LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) அர்ஜூன மூர்த்திக்கும், முரசொலி மாறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தயாநிதி மாறனே மறுப்பு தெரிவித்துவிட்டார்.

2) திராவிட பேரவை அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நந்திவர்மன் என்பவர் முரசொலி மாறனுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து, அவரை அர்ஜூன மூர்த்தி எனக் குறிப்பிட்டு, வதந்தி பரப்பியுள்ளனர்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False