‘’ ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷெரீப் அகமது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று விவரம் தேடினோம். கூகுள் ரிவஸ் இமேஜ் உதவியுடன் தகவல் தேடியபோது, இந்த படம் 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விவரம் கிடைத்தது. இதுபற்றி இணையதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவை கீழே இணைத்துள்ளோம்.

ரயில்வே ஊழியர்களுடன் சேர்ந்து புகைப்பட ஆர்வலர் ஒருவர் ஐதராபாத் கடந்து, ஆந்திரா - ஒடிசா எல்லையில் அமைந்துள்ள ரயில் பாதைகளைச் சுற்றி பார்த்து, படம் எடுத்து தங்களது தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது, Borra Guhalu என்ற ரயில் நிலையத்தையும் பார்வையிட்டு, அதன் ஸ்டேஷன் மாஸ்டரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். தவிர, அந்த ஸ்டேஷன் மாஸ்டரை புகைப்படம் எடுத்தும் உள்ளனர். அந்த படம்தான் இது.

இதுதொடர்பான கூடுதல் விவரம் அறிய கீழ்க்கண்ட லிங்க் சென்று பார்க்கவும்.

vikaschander.com link

எனவே, 2004ல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தற்போது நிகழ்ந்த ஒடிசா ரயில் விபத்துடன் தொடர்புபடுத்தி தேவையற்ற வதந்தியை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

ஏற்கனவே, ஒடிசா ரயில் விபத்துக்கு மதச்சாயம் பூசி , பதற்றம் ஏற்படுத்த முயற்சிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே ஒடிசா போலீஸ் எச்சரித்துள்ளது.

மேலும், விபத்து நிகழ்ந்த ரயில் நிலையத்தின் நிர்வாகி பெயர் SB Mohanty. அவர் தலைமறைவாக இல்லை. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

kalingatv.com link

இந்த விவகாரம் பற்றி Balasore GRP Police station வழக்குப் பதிந்து விசாரிக்கிறது. இதுபற்றி நாம் அவர்களிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர் இதனையே உறுதி செய்தார்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷெரீப் அகமது என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False