‘தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’ என்று பகிரப்படும் வைரல் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social தேசிய அளவில் I National

‘’தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நம்ம நாடு எங்கே சென்று கொண்டுருக்கிறது.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி ..
புராணங்களை மட்டும் நம்புனிங்கல இதையும் அனுபவியுங்கள்!’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்: 

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். குறிப்பிட்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை மட்டும் பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது பொழுதுபோக்கு நோக்கில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், உண்மை சம்பவம் கிடையாது என்றும் நமக்கு தெரியவந்தது. 

Kanhaiya Singh shorts என்ற யூடியுப் பக்கத்தில் முதன்முதலாக, கடந்த நவம்பர் 10, 2024 அன்று இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

முழு வீடியோ இதோ…

நாம் ஆய்வு செய்யும் வீடியோ போன்றே நிறைய வீடியோ பதிவுகள், அதே நபர்களை வைத்து, எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட யூடியுப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளதையும் கண்டோம். 

மேலும், இந்த யூடியுப் சேனல் நடத்தும் நபர், இவை அனைத்தும் பொழுதுபோக்கு நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட வீடியோ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதையும் காண முடிகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ உண்மையானதல்ல; பொழுதுபோக்கு நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு scripted வீடியோ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:‘தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’ என்று பகிரப்படும் வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISLEADING