திமுக.,வினர் இனி தினத்தந்தி படிக்க வேண்டாம் என்று பகிரப்படும் போலி நியூஸ் கார்டு…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’திமுக.,வினர் யாரும் இனி தினத்தந்தி வாங்க தேவையில்லை என்று தினத்தந்தி நிறுவனர் அதிரடி அறிவிப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி வைத்திருந்தார். இதனையே பலரும் உண்மை போல, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதையும் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் முக்கியமானது தினத்தந்தி. பல ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழின் தலைப்புச் செய்திகள் பலவற்றில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிடாமல், வெறும் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிடுவதாக, திமுக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபற்றி சமூக வலைதளங்களிலும் அவர்கள் கண்டனம் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே மேற்கண்ட வகையில் தந்தி டிவி பெயரில் போலியான செய்தியை தயாரித்து பகிர்ந்துள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. இதுபற்றி நாம் தந்தி டிவி ஆசிரியர் குழுவினரிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். அவர்கள், இது வேண்டுமென்றே தயாரித்து பரப்பப்படும் வதந்தி, எனக் குறிப்பிட்டனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:திமுக.,வினர் இனி தினத்தந்தி படிக்க வேண்டாம் என்று பகிரப்படும் போலி நியூஸ் கார்டு…

Fact Check By: Pankaj Iyer 

Result: False